வெள்ளி, 26 ஜூன், 2009

மொட்டைப் பனை

ஒற்றைடி; பாதையோரம் களங்கரை
விளக்கமென பட்டுப்போன அந்த
ஒற்றைப் பனை...
பாட்டி சொன்ன கதைகளிள் அதுவும்
ராஜாதான் செத்துப்போன தாத்தா
அங்கு கள்ளுக்குடிக்க போவாராம்,
வாட்டமுள்ள தேவடியா ஒருத்தி
சொட்டுச் சொட்டா ஊத்திக்கொடுப்பாளாம்
மிச்சமில்லாம குடிச்சாலும் நாலு காசுதானாம்
வெட்டித்தனமாக சில வட்டமேசை
மாநாடுகளும் பக்கம்பக்கமாய் கதைகளுமாம்
வாய்பேசாத வயித்தெரிச்சல் சுற்றிவந்து
கட்டிக்கொள்ள காலம் ஒவ்வொரு
பல்லையும் நாசுக்காக பிடிங்கி;க்கொண்டது
ரயிலோடும்தூரம் வரை எட்டிப்பார்த்த மரம்
இப்போ நாத்தம்புடிச்ச கம்மாக்கரையாய்
நாதியற்று நிற்கிறது..

வியாழன், 25 ஜூன், 2009

காதல்சுவடுகள்


உள்ளே வர அனுமதி கேட்ட தென்றல் வாசலிலே திரும்பிட முகம்வாடி நான் குப்புற புரண்டு ஆழமறியா சிந்தனையில் முத்துக்குளிக்கிறேன், அவள் முத்தமிட்ட கன்னங்களை தொட்டுப்பார்க்கையில் அப்பாவின் ரேகைகள் சத்தமில்லாமல் சங்கீதம் பாட அம்மா கண்ணீரை மட்டுமே மருந்தாக தருகிறாள்..