புதன், 28 ஏப்ரல், 2010

சிதறிய சிறகுகள்

யாரோ போட்டு வைத்த அஸ்திவாரம்
நம் அடிவாரமாயிற்று..
வெட்டிப்பேச்சுக்கொரு பொட்டு
இட்டு வேஸ்டி கட்டும் எண்ணங்களோடும்
கட்டிப்பிடித்து முத்தமிடா காதல் காயங்கள்
அப்பப்ப தலைதூக்கும்..
இப்படித்தான் நாமே என நட்ட
கல் எப்போதும் புகை குடிக்கும்..
கதிர்விழும் திசையில் கால்நீட்டி நாமிருக்க
இத்துடன் இலவசமாக சிரிப்புகளும்..
காலம் வந்து கயிற்றறுக்க முத்துக்களாய்
சிதறிப்போனோமே அன்புத்தோழனே..
வறுமை வந்து வயிற்றிலடிக்க வாசற்
கதவு மட்டும் நமக்காக காத்திருக்கும்..
புயலெனத்தான் வந்ததோ நமக்கென கடமை
சுங்கம் வைத்த நாம் காற்றின் சருகாயானோம்
இப்போ நாம் சிதறிப்போன சிறகுகள்
பசுமைக்குயிலின் சிறகதனை காலம் தன்
பிடுங்கிக்கொண்டு அமைதியாகத்தான் போனது….!

1 கருத்து: